புகையிரதம் மோதி இளைஞர் மரணம்!

Sunday, March 26th, 2017

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாழ். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த வேளையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணிபுரிந்து வருகின்ற நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கிலேயே புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: