புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி!
Thursday, August 23rd, 2018கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
ஒரு இளைஞரின் இரு துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு 7.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மட்டுவிலைச் சேர்ந்த மார்க்கண்டு சுலக்சன் (வயது22) மகாதேவா சுஜீவன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இன்று இரவு 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் சங்கத்தானைப் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், புகையிரதம் அண்மித்த தூரத்தில் வரும் போது, அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு துண்டுகளாக உடல் பிரிந்த இளைஞரின் சடலத்தினை சாவகச்சேரி வைத்தியசாலையில் புகையிரத பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
முற்றைய இளைஞரின் சடலத்தினை பொது மக்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
புகையிரதம், இரு சடலங்களையும் ஒப்படைத்த பின்னர் சுமார் 1 மணித்தியாலயம் தாமதித்தே யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை நோக்கிப் புறப்பட்டது.
Related posts:
|
|