புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, September 12th, 2018

புகையிரதக் கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என, புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டண அதிகரிப்புக்கமைய, ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாயில் மாற்றம் ஏற்படாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு அறவிடப்பட்ட ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாய், கட்டண திருத்தத்துக்கமைய 7 கிலோ மீற்றர் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: