புகையிரதக் கடவை அமைக்கபடாமையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்!

Saturday, April 6th, 2019

கிளிநொச்சி நகரத்தின் கனகபுரம் வீதிக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பயன்படுத்துகின்ற இரணைமடுச் சந்தி பாரதிபுரம் பகுதிக்கான புகையிரதக் கடவை எந்நேரமும் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகையிரத வீதியினை குறுக்கறுத்துச் செல்கின்ற போக்குவரத்துப் பாதைகளுக்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, திருமுறிகண்டி தொடக்கம் முகமாலை வரைக்குமான பகுதிகளில் புகையிரத வீதிகளை குறுக்கறுத்துச் செல்கின்ற சுமார் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட வீதிகள் பாதுகாப்பற்ற வீதிகளாகவே காணப்படுகின்றன.

இந் நிலையில் கிளிநொச்சி நகரத்தின் டிப்போச்சந்தி கனகபுரம் பிரதான வீதிக்கு அடுத்த நிலையில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்ன வீதிகளில் ஒன்றாக இரணைமடுச்சந்தி பாரதிபுரம் வீதி காணப்படுகின்றது.

இவ்வீதியூடாக மலையாளபுரம், கிருஸ்ணபுரம், அறிவியல் நகர், பாரதி புரம், செல்வ நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பாடசாலை மாணவர்கள் தினமும் பயணிக்கின்றனர்.

குறித்த வீதியின் புகையிரத வீதிக்கடவை  அமைக்கப்பட்மையால் தினமும் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள மேற்படி கிராம மக்கள் புகையிரத பாதுகாப்பு கடவையினை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

Related posts: