புகைப்பிடித்தல் – மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும் – சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாளாந்தம் 15 வயதுக்கு குறைவான சுமார் 4ஆயிரம் சிறுவர்கள் புகைபிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையும் குறித்த தரவுகளினூடாக தெரியவந்துள்ளது.
இதேவேளை புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதன் காரணமாக கொவிட்-19 தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும் சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த செயற்பாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதியமைச்சர் தெவரப்பெரும தற்கொலை முயற்சி!
100 ரூபாவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!
12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரை - சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்த...
|
|