பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது!

Friday, May 7th, 2021

பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் வரை பொதுமக்கள் தம்மை தாமே சுயமாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள், இது 2-3 நாட்கள் ஆகலாம்.

வீட்டில் மற்றவர்கள் இருந்தால் பி.சி.ஆர் சோதனைக்குப் பிறகு சுயமாக தனிமைப்படுத்தும்போது வீட்டில் கூட முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பி.சி.ஆர் சோதனையில் முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டில் தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் ஓய்வெடுக்கவும், நிறைய தண்ணீர் குடிக்கவும், பொறுப்புடன் செயல்படவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே பல இடங்களில், பி.சி.ஆர் சோதனை முடிவுகளைப் பெறும்போது சிக்கல்கள் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரிய கூறுகையில் –

சோதனைக்குப் பிறகு சுமார் 2 அல்லது 3 நாட்கள் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அந்த வகையில் சோதனை செய்வதற்கும் வெளியிடுவதற்கும் இடையிலான காலத்தில் வைரஸ் அதிக நபர்களுக்கு பரவ வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: