பி.சி.ஆர் இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாளாந்தம் 20,000 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
குமரன் பத்மநாதன் இலங்கையை விட்டு வெளியேறத் தடை!
அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!
எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!
|
|