பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !

Wednesday, January 11th, 2023

எம்பிலிபிட்டிய – பனாமுர – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட் நடவடிக்கை - சதொச நிவாரண பொதி தொடர்பில் அமைச்சர் பந்துல அறிவிப்பு!
இஸ்ரேல் - காசா மோதலை ஒரு கோணத்திலும் ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமி...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் - உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் ...