பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டம் அறிமுகம் – சுற்றாடல் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021

பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 2021 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமையினால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டம், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் விடுவிக்கப்படுகின்றமை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் ஷசே பைக்கற்றுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சார்ந்த 5 உற்பத்திகளுக்கு தடை விதிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: