பிலியந்தளை தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!

Thursday, May 11th, 2017

பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி விசாரிப்பதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பை நியமித்துள்ளார்.

Related posts: