பிலியந்தலை துப்பாக்கிச்சூடு; சிறுமி மரணம்!

police Friday, May 19th, 2017

பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் மீது, பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றிற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சிறுமி இன்று (19) மரணமடைந்துள்ளார்.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் , மேலும் இரண்டு அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

கடந்த மே 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒரு பொலிசார் மரணமடைந்ததோடு, மேலும் இரு பொலிஸார் காயமடைந்திருந்தனர். அது தவிர ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காயமுற்று, களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த இருவரில் 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமியின் சகோதரர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் (17) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.


அனைவரின் பங்களிப்புடன் புதிய யாப்பு உருவாக்கப்படும் - சபாநாயகர் கரு ஜயசூரிய!
யாழ்.பல்கலைக்கழகம் வந்தார் அமைச்சர் சுவாமிநாதன்!
சாவகச்சேரி வைத்தியசாலையில் பாதுகாப்பு அறை இல்லாது பெண் ஊழியர்கள் சிரமம்!
நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!
ஜப்பான் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !