பிலிப்பைன்ஸிற்கு பயணமாகவுள்ளார் ஜனாதிபதி!

Friday, January 11th, 2019

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடட்ரேவியின் அழைப்பிற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பிலிப்பைன்ஸின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி அவர் இந்த விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், 19ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: