பிறப்பு சான்றிதழ் இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

Thursday, December 21st, 2017

ஆட்பதிவு திணைக்களத்தின் தனியான பிரிவொன்று பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் இல்லாத ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெறவேண்டுமாயின் அவர் இலங்கை பிரஜையாக இருப்பதுடன் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதற்காக வாக்காளர் டாப்பில் உள்ள பதிவையும் பயன்படுத்த முடியும். இவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்போருக்கு ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்திணைக்களத்தினால் புதிய நடைமுறை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றது. தோட்ட மக்கள் தமது ஊழியர் சேமலாப நிதியை பெற்று கொள்ள தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்று கொள்வதற்கு அதாவது பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணமாக தேசிய அடையாள அட்டை அற்றோருக்காக இவ்வாறான செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதோடு இந்த விசேட பிரிவுக்கு இதுவரையில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது என்றும் இதில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: