பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

பிரிவினைவாதம் தோன்றிய பிரதேசங்களை முன்னேற்ற வேண்டும் என்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது பிரதான பொறுப்பாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாம் நாட்டில் இருந்த பிரிவினைவாத தீவிரவாதத்தைத் தோற்கடித்தோம். தற்போது அதை நாம் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். அடிப்படை மதவாதத் தீவிரவாதம், இன்று முழு உலகிலும் காணப்படுகின்றது.
நாம் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். அவ்வாறான நிலைமை ஒன்று, எம் நாட்டில் மீண்டும் உருவாகக் கூடாது. இது எந்தவொரு மதத்தையும் தாக்கும் விடயமல்ல.
நாம் எல்லோரும் அறிந்த முழு உலகமும் அறிந்த இந்த நிலைமைக்கு, நாம் முகங்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை, நான் ஒரு கொள்கை ரீதியில் முன்னெடுத்துள்ளேன். அதற்கு அவசியமான, தகுதிவாய்ந்த அதிகாரிகளை, உரிய பதவிகளுக்கு நியமித்துள்ளேன்.
பாதுகாப்புச் செயலாளர் என்றாலும், படைத் தளபதிகள் என்றாலும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்றாலும், உரிய பொறுப்புக்களில் தகுதியானவர்களை நியமித்துள்ளேன்.
அதே போன்று – முப்படையில் காணப்படும் புலனாய்வுப் பிரிவினரின் மனநிலையை நான் மேம்படுத்தியுள்ளேன்.
இராணுவ அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் தேவையின்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை நீக்கியுருக்கின்றேன்.
அவர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்கியுள்ளேன்.
நாம் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதனை செய்வேன் என நான் மக்களுக்கு உறுதியளித்துள்ளேன்.
அதனை நிறைவேற்றுவதற்காகத் தியாக மனப்பான்மையுடனேயே நான் செயற்பட்டுவருகின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
00
Related posts:
|
|