பிரிவினைவாதத்றிற்கு இடமில்லை – பொலிஸ்மா அதிபர்!

தற்போது நாட்டில் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியும். அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பூரண சுதந்திரம் வழங்கியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்த நாட்டில் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை. இவ்வாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு பல்வேறு பணிப்புரை விடுக்கவுள்ளேன். ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் செய்வோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை வெளியீட்டு விழா பத்தரமுல்லை வோர்டர்ஸ் ஏஜ் ஹொட்டலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
தாயின் கவனக் குறைவால் பலியான 4 வயது சிறுமி: சோகத்தில் மிதக்கிறது மூதூர்!
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
ஆசியாவின் ராணிக்கு போலியான விலை அறிவிப்பு!
|
|