பிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Sunday, July 21st, 2019

பிரித்தானியாவிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பிரித்தானிய கொடியுடன் சென்ற ஸ்டீனா இம்பேரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன், லைபீரிய கொடியுடன் காணப்பட்ட பிரித்தானியாவில் இருந்து இயங்கிய மற்றொரு எண்ணெயக்கப்பலையும் ஈரான் கைப்பற்றியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

எனினும், அந்த கப்பலை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஈரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரித்தானிய கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: