பிரித்தானிய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம்!

Wednesday, September 28th, 2016

இலங்கையில் இருந்து பதவி ஒய்வுபெறும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா என்ற யஸ்வர்தான் குமார் சிங்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது. 2013ஆண்டில் இருந்து சிங்ஹா இலங்கையில் உயர்ஸ்தானிகராக செயற்பட்டார்.

முன்னதாக அவர் பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.இதேவேளை, 1981ஆம் ஆண்டு வை.கே.சிங்ஹா இந்திய வெளியுறவு சேவையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sinha01

Related posts: