பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!

பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய குறித்த விஜயம் அமைந்துள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் கண்டி யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!
|
|