பிரித்தானிய அரசாங்கம் நிதியுதவி!

Thursday, August 16th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் 1 மில்லியன் பவுண்ட்களை வழங்கியுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் புதிதாக குடியேற்றப்பட்ட மக்களுக்கான அடிப்படை உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் கீழ் 600க்கும் அதிகமான குடும்பங்கள் நன்மைபெறவுள்ளன.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் குடியேற்றப்பட வேண்டியது அரசாங்கத்துக்கு பெரும் கடமையாகும். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புதிதாக குடியேறியவர்களுக்காக இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: