பிரித்தானியாவை புரட்டிப்போடும் கொரோனா: 24 மணி நேரங்களில் 980 பேர் உயிரிழப்பு!

Saturday, April 11th, 2020

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900- ஐ தாண்டியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரமர் போரிஸ் ஜான்சன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பிரித்தானிய பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலை பிரித்தானியாவில் கட்டுப்படுத்த முடியாததால், நாள் தோறும் உயிரிழப்புகள் அதிகளவில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 980-ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பிரித்தானியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958- எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்ர்துடன் நேற்று 881 பேர் உயிரிழந்திருந்ததுடன் அதற்கு முந்தைய நாள் 938 பேரும் உயிரிழந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 980-பேர் உயிரிழந்துள்ளதால், பிரித்தானிய மோசமான நிலையை சந்தித்துள்ளது.

அத்துர்டன் பிரித்தானியாவில் இந்த நோய் காரணமாக நேர்மறை சோதனை முடிவுகளை பெற்றவர்களில் 19,304 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் லண்டனில் இருக்கும் St Thomas மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டார்.

இதையடுத்து பிரதமர் நல்ல நிலையில் குணமாகி வருகிறார், அவர் ஓய்வு நேரங்களுக்கிடையில் குறுகிய நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ன.

அத்துடன் அவர் தனது மருத்துவர்களிடம் பேசியதோடு மட்டுமின்றி, தனக்குக் கிடைத்த நம்பமுடியாத கவனிப்புக்காக முழு மருத்துவக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் எனவும் இதனிடையே

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அமெரிக்காவில் ஒரே நாளில் 2108 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18719 ஆக அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டாயிரத்து அதிகமானோர் உயிரிழந்த முதலாவது நாடு அமெரிக்கா என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: