பிரித்தானியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விசேட ஆலோசனை கூட்டம்!

Monday, September 2nd, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரித்தானிய கிளை கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் திரு மனோ அவர்களின் தலைமையில் நேற்று (01.09.2019) இடம்பெற்றது.

மொளன அஞ்சலியுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில்
கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் Skype காணொளியில் தோன்றி தற்கால அரசியல் நிலைமை பற்றியும், நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சி ஏன் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவளிப்பதென்பது பற்றியும் விரிவாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த தோழர் சுரேஷ் அவர்கள், கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதற்கு சரியான நேரம் இதுவென்றும், அதனால் துரிதமாக செயல்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக தோழர் மனோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, கட்சியைப் பலப்படுத்துவதற்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் அனைத்துத் தோழர்களின் பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.தோழர் மனோ அவர்களின் கருத்திற்கு கூடியிருந்த அனைத்து தோழர்களும் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவோம் என மகிழ்வுடன் தெரிவித்தனர்

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், பிரித்தானியா கிளை தொடர்பாளருமான தோழர் ரமேஷ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரான தோழர் றமணன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான தோழர் ஆனந்தன், தோழர் திவான், தோழர் பாலா, தோழர் விக்னேஷ் தோழர் சுரேஷ், தோழர் றமணன் kayts, தோழர் தயா, தோழர் ராஜ்குமார் மற்றும் அப்பன் மற்றும் முக்கிய ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Related posts:


ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல் - ஊர்காவற்றுறையில் சம்பவ...
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் தி...
தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள...