பிரித்தானியாவின் முடிவால் இலங்கைக்கு பாதிப்பில்லை!

Saturday, June 25th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகிச் செல்ல தீர்மானித்துள்ளமையானது எமது நாட்டின் பொருளாதாரத்தில் எவ்விதமான  பாதிப்புக்களையும் ஏற்படுத்தாதென  நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரத்தானியா விலகிச் செல்ல தீர்மானித்தமையால் இந்தியா உட்பட பல நாடுகளின் பங்குச்சந்தையில் உடனடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் நாட்களில் நாணயத்தில் ஏற்படும் வீழ்ச்சி பல நாடுகளில் பொருளாதார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என பொருளதார நிபுணர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் – எந்த ஒரு நாட்டினையும் நம்பி நாம் ஜீவிக்கவில்லை. அவ்வாறானதொரு பாரதூரமான சிக்கல் நிலைமை இதுவரையில் தோன்றியதும் இல்லை எதிர்காலத்தில் தோன்றுவதற்கான சாத்தியங்களும் இல்லை எனவே வெகுவிரைவில் இந்த நிலைமைக்கு தீர்வை காணமுடியும். ஆனால் தற்போது வரையில் பிரித்தானியாவின் இந்த விலகள் எம்மை பாதிக்கவில்லை என்பது முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்கது.  எதிர்காலத்திலும் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. அதனால் இது தொடர்பில் கருத்து வெளியிடுவது குறித்தும் அரசாங்கம் பெரிதாக முற்படவில்லை என்றார்.

Related posts: