பிரித்தானிய நாடளுமன்ற தாக்குதல் – இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு!

Thursday, March 23rd, 2017

நேற்று வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல்களுடன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று இலண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரியின் அடையாளத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவே கருதுவதாக தெரிவித்த இலண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி, இது குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது ஒரு கார் மோதிய போது, மூவர் கொல்லப்பட்டுட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பின்னர், காரில் இருந்த அந்த தாக்குதல்தாரி நாடாளுமன்ற வளாக மைதானத்துக்கு சென்று தான் சுடப்படுவதற்கு முன்னர் அங்கு இருந்த ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்தினார்.இந்த தாக்குதலை ஆரோக்கியமற்ற மற்றும் இழிவான தாக்குதல் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வர்ணித்துள்ளார்.

Related posts: