பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

Monday, March 7th, 2022

உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுது.

இதனிடையே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் சிறப்பாக வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சர்களின் தலைமை பண்பு மிகச் சிறப்பானதாக உள்ளது. அவர்கள் இந்த இக்கட்டான சூழலிலும் துணிச்சலான உக்ரைன் மக்களின் உருவகமாக இருந்துள்ளனர்.

நான் சமீபத்தில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினேன். அவர்கள் அனைத்திற்கும் தாயாராகவே உள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏதாவது நேர்ந்தாலும் கூட அரசு தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் இயங்க தேவையான அனைத்து திட்டங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ரஷ்யா மீது அறிவிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது.

இதனால் ரஷ்யாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ரஷ்யா உடனடியாக இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளரம குறிப்பிடத்தக்கது.

000

Related posts: