பிரான்ஸுக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் முன்னெடுக்கிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Monday, September 6th, 2021

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸின் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்துக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இந்த சேவையில் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை ஈடுபடுத்தவுள்ளதுடன், இந்த விமானங்கள் வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் பிற்பகல் 12.35 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளன.

இவ்விமானம் மறுநாள் காலை 7.30 மணிக்கு பாரிஸை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: