பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும் – பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்!

எரிபொருள் நெருக்கடியால் அனைத்து பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் வழங்கப்படும் சேவைகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்த பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அடுத்த 10 நாட்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் அமைந்துள்ள கிளைகள் வார நாட்களில் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|