பிரபாகரனின் மகள் உரை விவகாரம் – நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023

கடந்த மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் மகள் உரையாற்றுவது போல் வீடியோ தயாரித்து வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த   நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் எனவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளஊடகவியலாளர் சந்திப்பின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் காணொளியை நாம் அவதானித்தோம். அது தயாரிக்கப்பட்டதொன்று என்பது எமக்கு தெரியும். பயங்கரவாத விசாரணைப்பிரிவும் குற்ற விசாரணை பிரிவும் இது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றன. இவ்வாறான விடயங்களை வெளியிடுபவர்களை நிச்சசயம் தேடி கண்டு பிடிப்போம். அவர்களை நிச்சயம் கைது செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: