பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி வைத்தியர் கைது!

Thursday, September 12th, 2019

காராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிக்வெல்ல, பத்திகமவை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

மருத்துவர் போன்ற தோற்றத்தில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவ விடுதிக்கு குறித்த இளைஞன் சென்று கொண்டிருந்த வேளை சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல வழங்கியுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், அந்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

சிறுவயதில் தந்தையை இழந்த குறித்த இளைஞர் , க.பொ.த உயர்தரத்தில் 2 ஏ, 1 பி பெற்றதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எனினும், வைத்தியராக வேண்டுமென்பதே அவரது சிறுவயது கனவாக இருந்ததால் தனது கனவு நிறைவேறாத நிலையில், போலி வைத்தியராக நடித்து மனதை திருப்திப்படுத்துவதாக குறித்த இளைஞர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Related posts: