பிரபல சட்டத்தரணி றெமீடியஸின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Thursday, August 31st, 2017

காலஞ்சென்ற அமரர் கயித்தாம்பிள்ளை முடியப்பு (சுவாம்பிள்ளை)யின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகளிலும் பங்கெடுத்தார்.

முன்பதாக இல 27/1, 1 ஆம் குறுக்குத் தெரு, பாஷையூர், யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி  இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்

சமயக் கிரியைகளைத் தொர்ந்து அன்னாரது பூதவுடல் யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு எடுத்தச்செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வுகளில் செயலாளர் நாயகத்துடன் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

காலஞ்சென்ற அமரர் காலஞ்சென்ற அமரர் கயித்தாம்பிள்ளை முடியப்பு பிரபல சட்டத்தரணி றெமீடியஸ் அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: