பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!

டக்ளஸ் தேவானந்தாவின்; தலைமையையும்; கொள்கையையும் ஏற்றுக் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் யாழ் மாவட்டத்தின் பிரபல சட்டத்தரணியும் ஐக்கிய தமிழ் சட்ட நடவடிக்கை பேரவையின் ஸ்தாபகருமான செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லஸ் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செலஸ்ரீன் கட்சியின் உறுப்புரிமைக்கான பத்திரத்தை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பாட்டாளருமாக விளங்கிய செலஸ்ரீன் கூட்டமைப்பினரின் திசை மாறிய கொள்கையையும் நிலையையும் மக்களின்பாலான அவர்களது அக்கறையற்ற தன்மையையும் கருத்திற்கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தான் கொண்ட கொள்கையில் எப்போதும் நிலை தளம்பாதவராகவும் தூர நோக்கும் நேர் கொண்ட பார்வையையும் தீர்க்கதரிசனமுமான தமிழ் மக்களின் மிகச் சிறந்த தமிழ் அரசியல் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவை தான் நோக்குவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே நடைபெறவுள்ள உள்@ராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவும் களப் பணிகளை ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|