பிரதேச செயலாளர் பதவிக்கு 40 வெற்றிடங்கள்!

Tuesday, June 21st, 2016

 

நாடளாவிய ரீதியில் 40 பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பதவிகளுக்கு தற்போது பதில் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்தினசிரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 42 உதவி பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் பல்வேறு காரணங்களுக்காக பிரதேச செயலாளர் பதவி குறித்து அதிகாரிகள் அச்சப்படுவதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்

Related posts: