பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா?

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வருவதால் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக திலங்க சுமதிபால கூறியதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
Related posts:
நிலைபேறற்ற அரசாங்கத்தின் முடிவு காலம் இது - முன்னாள் யாழ் மாநகர முதல்வர்
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் கொவிட் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்ல...
|
|