பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார்! ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு!

Friday, July 1st, 2016

தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலிததேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.9 மாணவர்களை முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி பிரதியமைச்சர்கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் பாடசாலையின் அதிபரை அவர் தாக்கியுள்ளார்இதனையடுத்து அதிபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர், பலாத்காரமாக குறித்த 9 மாணவர்களின் பெயர்களையும் பாடசாலை வகுப்புபதிவேட்டில் பதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபிரதியமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கொழும்பின் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

Related posts: