பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது எதிர்வரும் 20ம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாலக டி சில்வா கட்டாய விடுமுறையில் அனுப்புவதா, இல்லை வேலையில் இருந்து நிறுத்துவதா என்பது குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் நிர்வாகக் குழு குறித்த நாளில் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி இலங்கை வருகை!
எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை - தனியார் பேருந்து சங்கம்!
பணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
|
|