பிரதான 18 வைத்தியசாலைகளின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்த்தினால் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான 5 காரணிகளை முன்னிலைப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
நாடுமுழுவதும் உள்ள 18 பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
தொழிசார் நிபுணர்களின் கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் ஊவா மாகாணத்தின் தனியார் வைத்திய அதிகாரிகள் இவ்வார்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதுடன், அடுத்து வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களுக்கும் இப்போராட்டத்தை விஸ்த்தரிக்கவுள்ளோம் என்றார்.
Related posts:
புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உரிமையை இ.போ.ச.வுக்கு வழங்குமாறு கோரிக்கை!
போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உண்டு - ஜனாதிபதி !
விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற ஐவர் மருத்துவமனையில்!
|
|