பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்து!

Tuesday, April 11th, 2023

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பிரதான நகரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையினால் அதனை நிவர்த்திப்பதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: