பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு – இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் இரத்த வங்கியின் பணிப்பாளர் அவசர வேண்டுகோள்!

Friday, November 6th, 2020

இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

அண்மைக் காலமாகவே இரத்த தான நிகழ்வுகள் நடத்துவதில் பெரும் நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருவதனால் குருதி வங்கியில் போதியளவு கையிருப்பு கிடையாது என இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்குச் சட்டம் காரணமாக இரத்த தானம் செய்ய வரும் கொடையாளர்களுக்கு வருகை தர முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருதிக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென அவர் மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: