பிரதமர் வியட்நாம் பயணம்!

Saturday, April 15th, 2017

வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் விடுத்துள்ள அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது குறிப்பாக இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் தற்போது ஜப்பானிற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு வியட்நாமிற்கான பயணத்தை தொடரவுள்ளார்.

Related posts: