பிரதமர் ரணில் ஹொங்கொங் பயணம்!

Wednesday, November 2nd, 2016

ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின் பிரதான உரையை பிரதமர் ஆற்றவுள்ளார் என தெரியவருகின்றது.

1986ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆசிய மற்றும் ஜெர்மன் பிராந்திய நாடுகளின் வர்த்தகப் பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

ranil-0-0

Related posts: