பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயம்!

Thursday, March 1st, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் அங்கு நடைபெறவுள்ள ‘இலங்கையில் முதலீடு’ என்ற மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் முக்கிய முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, சிங்கபூரின் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்டவர்களும் இந்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த மாநாடு இதற்கு முன்னர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய ராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஹொங்கொங் முதலான நாடுகளில் நடைபெற்றிருந்தது.

Related posts: