பிரதமர் ரணில் நோர்வே பயணம்!

Tuesday, October 2nd, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்து நோக்கிய சுற்றுப்பயணத்தினை இன்று(02) இரவு மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நோர்வேக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் அங்கு இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தல் மற்றும் மீன்பிடி தொடர்பிலும் விசேட கலந்துரையாடல்கள் பல நடைபெறவுள்ளதோடு, இதற்காக அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, விஜித் விஜயமுனி சொய்சா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே நோர்வே சுற்றுப்பயணத்தின் பின்னர் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே இனது அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்திற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயனத்தினை நிறைவு செய்து இம்மாதம் 10ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: