பிரதமர் ரணில் ஜேர்மன் பயணத்திம்!

Thursday, October 5th, 2017

பிரத்தியேக விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(05) ஜேர்மன் விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்து விட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக பின்லாந்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தல், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தல் என்பனவே குறித்த இந்த விஜயத்தின் நோக்கம் என, பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பிரதமருடன் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட குழுவினரும் பின்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: