பிரதமர் ரணில் இன்று இந்தியா விஜயம்!

Tuesday, October 4th, 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதுடில்லி செல்லவுள்ளார்.

நியூசிலாந்து விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் தலைமையிலான குழு இன்று(04) அங்கிருந்து இந்தியா செல்கிறது.புதுடில்லி செல்லும் பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார்.

நாளை மறுதினம் (06) வியாழக்கிழமை புதுடில்லியில் நடைபெறும் இந்திய பொருளாதார மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த மாநாட்டை உலகப் பொருளாதார மாநாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றது.

புதுடில்லி விஜயத்தின் போது பிரதமருடன் அவரது துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தொலைத் தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, ஐந்தாண்டுத் திட்ட பிரதானி அர்ஜுன மகேந்திரன், பிரதமரின் விஷேட உதவியாளர் சென்றா பெரேரா, அபிவிருத்தி முகாமைத்துவ பணிப்பாளர் மங்கள யாப்பா, வெளிவிவகார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் லக்ஷ்மி ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவ்வார இறுதியில் புதுடில்லி செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

ranil-0-0

Related posts: