பிரதமர் ரணிலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!

Friday, May 13th, 2022

பிரதமரை ரணில் விக்கிரமசிங்கவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சந்தித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை இன்ற காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாடு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் , இலங்கைக்கு உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும்.

இதேவேளை இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள அவர், இம்மாத இறுதிக்குள் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது இலங்கை  தற்போது எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இருநாட்டு பிரதமர்களும்  விவாதிப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுங்க அதிகாரி...
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜ...
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை ...