பிரதமர் யாழிற்கு விஜயம்!

Wednesday, July 18th, 2018

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.

இதன்போது கம் பெரலிய தேசிய வேலைதிட்டத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தமது வடக்கு விஜயத்தின் போது பலாலி விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துவார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவர் இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுடன் இணைந்து பலாலி விமான நிலைய வளாகத்தைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: