பிரதமர் மஹிந்த ராஜபச்சவுக்கு இன்று அகவை 76 – இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்தவர் மஹிந்த ராஜபக்ச என ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, November 18th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 763 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.  நவம்பர் 18, 1945 இல் பிறந்த அவருக்கு தற்போது 76 வயதாகிறது.

இந்நிலையில் அனுராதபுரத்தில் சந்தஹிரு சேயாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் இத்தகைய மகத்துவம் கொண்ட ஒருவரால் வழிகாட்டப்படுவதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 76 ஆவது பிறந்த நாளை ஒட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்த எனது அன்புச் சகோதரரே, உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என இன்று காலை தனது ருவிட்டரில் கோட்டாபய ராஜபக்ச பதிவிட்டுள்ளமை குறீப்பிடத்தக்கது.

இதனிடையே

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 76 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்ற நிலையில், பம்பலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

இச்சிறப்பு வழிபாடுகளில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார மற்றும் பிரதமரின் பௌத்த சாசன அமைச்சின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: