பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு!

இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்தக்கூடிய விதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய வெளியுறவு செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
முன்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் நேற்று மூன்று மாவட்டங்களுக்கு சென்றதுடன், திருகோணமலை எண்ணெய் குதங்களையும் பார்வையிட்டார்.
அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!
இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்ச...
|
|