பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு – இலங்கை வருகிறார் சுப்ரமணியன் சுவாமி!

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள நவராத்திரி பூஜையிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விசேட தனி விமானமொன்றில் சுப்ரமணியன் சுவாமி இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இதேவேளை சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரீட்சை அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு வழங்காத அதிபர்களுக்கு நடவடிக்கை!
லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!
8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!
|
|