பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு ஆயர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உற்சவ காலத்தில் கிறிஸ்தவர்களையும், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், பாடசாலைகளை ஆரம்பித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கொழும்பு ஆயர் அவர்கள் இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் மக்களை விழிப்பூட்டுமாறு பிரதமர் கொழும்பு ஆயரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு அனுநாயக்கர் அருட்தந்தை பெரி ப்ரோஹியர், கொழும்பு மறைமாவட்ட செயலாளர் ராஜன் ஆசீர்வாதம் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சட்ட அதிகாரி ரொஹான் எதிரிசிங்க, அருண் கமலத்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|