பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை அலரி மாளிகயைில் விஷேட சந்திப்பு!

Sunday, May 3rd, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளையதினம் இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் போது கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  2015 ஆம் ஆண்டுக்கு முன் நாடாளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்திய சில உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ள  குறித்த சந்திப்பில் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் அறிவித்துள்ளது. எனினும், குறித்த சந்திப்பில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

முன்பதாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்திருந்த நிலையில் அதை ஜனாதிபதி நிராகரித்திருந்தார். இந்நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் ...
அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதியின...